முதல் அடியை நீங்கதான் எடுத்து வைக்கவேண்டும்;

தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவர முதல் அடியை அமெரிக்கா எடுத்து வைக்குமாறு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ஜி - 7 நாடுகள் சந்திப்பில் ஈரான் அதிபரை சந்திக்க தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ட்ரம்பின் பதிலுக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பதிலளித்திருக்கிறார்.
இதுகுறித்து ஹசன் ரவ்ஹானி தொலைகாட்சியில் பேசும்போது,”முதலில் எங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை திரும்பி பெறுவதற்கான முதல் அடியை அமெரிக்க எடுத்து வைக்க வேண்டும் ஈரானுக்கு எதிராக விதித்த அனைத்து சட்ட விரோதமான பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும். எனவே ஈரானுடன் நட்புறவை ஏற்படுத்தக் கூடிய சாவி தற்போது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது” என்றார்.

No comments