எனது ஆதாரங்களை பார்த்து விசாரணை குழு அதிர்ச்சியுற்றது - ரஞ்சன்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் நேற்று (08) அழைக்கப்பட்டிருந்தார் 

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மஹா நாயக்க தேரர்கள் தொடர்பில் பல்வேறு விமர்சிக்கத்தக்க கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்த நிலையில் நேற்று அந்த குழு முன் அவர் முன்னிலையானார். 

அந்த விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, குறித்த விடயம் தொடர்பில் தன்னிடம் உள்ள ஆதாரங்களை பார்த்து ஒழுக்காற்று குழு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். 

அனைத்து சாட்சியங்களையும் ஒழுக்காற்று குழவில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக கூறினார். 

No comments