மகேந்திரனுக்கு மீண்டு பிடியாணை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு நிரந்தர நீதாய நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பிடியாணையை ஆங்கிலத்தில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

No comments