கத்திக் குத்தில் ஒருவர் பலி

பூகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டாவில மஹிந்த வித்தியாலயத்திற்கு அருகில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments