அரச படைகளினால் அபகரிக்கப்பட்ட காணிகளை கோரி போராட்டம்

காணி விடுவிப்பை வலியுறுத்தி,
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் கவனஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 அளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்றது.

குறித்த பேரணியில் கலந்துகொண்ட மக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து அவரிடம் நாடளாவிய ரீதியில் காணிகள் விடுவிப்பது தொடர்பில் பெற்றுக்கொண்ட கையொப்பம் அடங்கிய மனுவை கையளித்தனர்.

படையினர் வசம் உள்ள காணிகள் மற்றும் வனவள பாதுகாப்பு பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்க வேண்டும் என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments