அரசியல்வாதிகளும் காணிகளை அபகரித்தனர்? மட்டுவில் போர்க்கொடி

இராணுவம், வனவளத் திணைக்களம் மற்றும் அரசியல்வாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி காணி அபகரிப்புக்களுக்கு எதிராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28) மட்டக்களப்பு - காந்தி பூங்கா முன்னாலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வனஜீவராசி திணைக்களமே எமது காணிகளை அபகரிக்காதே..!, அரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே, இராணுவமே எமது காணிகளைவிட்டு வெளியேறு..! போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

No comments