காணி விடுவிக்க சொல்லும் மைத்திரி?



வடக்கு கிழக்கிலுள்ள படைமுகாம்கள் எதனையும் மூட அனுமதிக்கமுடியாதென இலங்கை இராணுவத்தின் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ள நிலையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலின்றி வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி பணிப்புரை விடுத்துள்ளார்.


எனினும் தனது வடக்கிற்கான விஜயத்தை முன்னிட்டு மக்கள் போராட்ட களங்களில் இறங்காதிருப்பதை உறுதிப்படுத்தவே இத்தகைய அறிவிப்பினை மைத்திரி விடுத்திருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பொதுமக்கள் கவனயீர்ப்புபேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

குhணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்திதேசியமீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி ஏ-9 வீதி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகம் வரை சென்று அரச அதிபர் சுந்தரம் ஆருமைநாயகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

இதேவேளை காணி விடுவிப்பை வலியுறுத்தி,வடக்கு கிழக்கின் பல இடங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No comments