வைத்தியர் சிவரூபனிற்கு சித்திரவதை?


வைத்திய அதிகாரி சிவரூபனுக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு, அவரது குடும்பத்தினரால், நேற்று (27) மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில், சிவரூபனை எவ்வித அடிப்படை காரணங்களுமின்றி, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, அவரை மாலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்து காலையில் மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை நாளாந்தம் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்திருக்கும் போது, அங்கு பலரும் அவரை பார்த்து விமர்சிப்பதாகவும் இது அவரது வைத்திய தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்விகாரத்தில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தலையிட வேண்டுமெனவும், அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments