பரிந்துரைக்கப்பட்ட 13 தூதுவர்களுக்கு அங்கீகாரம்

உயர் பதவிகள் குழுவினால் 13 புதிய தூதரகங்களின் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள அல்லது நியமிக்கப்பட்டுள்ள நபர்களின் ஏற்புடைய தன்மையை ஆராய்வதற்கான பாராளுமன்ற உயர் பதவிகள் குழு (உயர் பதவிகள் குழு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக பரிந்துரை செய்யப்பட்ட பதின்மூன்று நபர்களை அங்கீகரித்துள்ளது. 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த பதின்மூன்று புதிய தூதரகங்களின் தலைவர்களில், ஒன்பது பேர் இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த தொழில்முறை இராஜதந்திரிகளாவர்: 

இதன்படி திரு. ஏ.எஸ். கான், நைஜீரியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், திரு. யு.எல். முஹம்மத் ஜவுஹர், குவைத்திற்கான இலங்கைத் தூதுவர், கலாநிதி. ஏ.எஸ்.யு. மென்டிஸ், கொரியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவர், திருமதி. எஸ். ஷானிகா திஸ்ஸாநாயக்க, ஜோர்தானிற்கான இலங்கைத் தூதுவர், திரு. டப்ளியு.ஜி.எஸ். பிரசன்ன, வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர், திருமதி. ஹிமாலி அருணாதிலக்க, நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர், திரு. லக்ஷித ரத்நாயக்க, கியூபாவிற்கான இலங்கைத் தூதுவர், திரு. பி.ஆர்.எஸ். சுகீஸ்வர குணரத்ன, எத்தியோப்பியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் திருமதி. டி.பி.சி.டப்ளியு. கருணாரத்ன, லெபனானிற்கான இலங்கைத் தூதுவர். என நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments