வடகிழக்கில் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு ?


வட-கிழக்கு  தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி மாவட்டங்கள் ரீதியாக கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் ,கிளிநொச்சியில் மற்றும் அம்பாறையில் என காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களே பரவலாக வவுனியாவில் இன்று இடம்பெற்றிருந்தது. 

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை ஆரம்பமாகிய பேரணி ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை சென்றிருந்தது. 

அங்கு ஆரப்பட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல் போன உறவினர்களை ஒப்படைக்குமாறும் அரசு நீதியை தர வேண்டும் எனவும் காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பினர். 

இதனிடையே வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது இன்னொரு பிரிவினர் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அம்பாறையில் கல்முனையிலும் இதே போன்று மக்கள் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

No comments