இலங்கை மண்டேலா கூட்டமைப்பினை கைவிட்டார்?


இலங்னை ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பற்றி அலட்டிக்கொள்ள கூட அவர் தயாராக இல்லாதிருந்தமை அப்பட்டமாக தெரிந்தது.

பருத்தித்துறை துறைமுக அடிக்கல் நாட்டு நிகழ்விற்கு கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்களான த.சித்தார்த்தன்,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

ஆனாலும் மாவையினை கண்டுகொண்ட மைத்திரி மற்றையோரை பற்றி பொருட்டாக கண்டு கொண்டிருக்கவில்லை.சாதாரண கூட்டமைப்பின் அடிமட்ட தலைவர்கள் போல அவர்கள் காத்திருந்தனர்.

நிகழ்வில் படை அதிகாரிகளிற்கு முன்வரிசை இடமொதுக்கிய மைத்திரி மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பினரை பின்வரிசைக்கு தள்ளிவிட்டிருந்தார்.

முன்னதாக யாழ்ப்பாண  விஜயத்திற்கு முன்னததாக கொழும்பில் மைத்திரி கூட்டிய சமகால மக்கள் பிரச்சினை தொடர்பிலான கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவமோகன், ஈ.சரவணபவன், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள், முக்கிய விவகாரத்தை பேசும் கூட்டத்தில் கலந்துகொள்ளாததால் கோபமடைந்த ஜனாதிபதி கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இக்கூட்ட எதிரொலியே மைத்திரியின் யாழ்.விஜயத்தின் போது எதிரொலித்திருந்தது.

யாழில் நடைபெற்ற நிகழ்வுகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் கூட்டமைப்பினர் ஒதுங்கி கொண்டதனை காணமுடிந்தது.

இதனிடையே மைத்திரி மற்றும் ஆளுநர் சுரேன் இரகாவன் ஆகியோர் தமது பயண பதிவுகளிலும் கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக மைத்திரியினை இலங்கையின் நெல்சன் மண்டேலாவென கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments