வவுனியாவில் சுற்றி வளைப்பு; 10 பேர் கைது - வலைகள் மீட்பு.

வவுனியா பாவற்குளம் பகுதியில் இன்று(08) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான நூறு வலைகளையும் மீட்டுள்ளதாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அதிகாரி யோ.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

No comments