எம் மீது நம்பிக்கை வைத்தால் உங்கள் கனவுகள் நிறைவேறும் - அநுர

கனவு காணுங்கள் நிச்சயமாக அதனை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். எம்மீது நம்பிக்கை வையுங்கள் நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கி்ன்றோம் என்று தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜேவிபி தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி பேரணி இன்று (18) மாலை காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இதன்போது அங்கு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக என்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். தேசிய மக்கள் சக்தி என்பது நாடு முழுவதும் வாழும் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களினால் பேசப்படும் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. அதற்கு காரணம் இவ்வாண்டின் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னிருந்த ஜனாதிபதிகள் ஆட்சியாளர்கள் இருந்த அனைவரும் நாட்டு மக்களின் நம்பிக்கையை சிதைத்தனர். அவ்வாறு சிதைத்து மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்தவர்களே அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். அந்த நம்பிக்கை சிதைந்து போன மக்களின் நம்பிக்கையின் ஔியாக, ஊற்றாக, நம்பிக்கையின் கீற்றாக தேசிய மக்கள் சக்தி மலர்ந்திருக்கின்றது.

இம்மக்கள் சக்தியின் மூலம் நாம் அழைப்பு விடுக்கின்றோம். கடந்த காலம் முழுவதுமே இந் நாட்டின் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதாக, இந்நாட்டின் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை அல்லது மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதாக கூறி ஆட்சிப் பீடம் ஏறிய அனைவரும் இந்நாட்டின் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையை சிதைக்கும் நடவடிக்கையையே முன்னெடுத்து வந்தனர். அவ்வாறு சிதைத்ததன் விளைவாக இந்த நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் கடந்த கால அராஜக போர்க் கொடியாக அல்லது மக்கள் மீதான வெறுப்பை கொண்டதாக அரசியல் மாறியிருக்கின்றது.

கலாசார, சுற்றாடல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் நாம் எடுத்து பார்க்கும் போது இந்த நாட்டை நாசமாக்கு திசையை நோக்கி நாட்டை மேலும் படுபாதாளத்திற்கு தள்ளும் திசையை நோக்கி நகர்த்துவது எமது கண் முன்னால் தெரிகின்றது. இந்த அபாக்கியமான நிலையை கண்டு இலங்கையில் வாழுகின்றன மக்கள் இன்னும் மௌனிகளாக கைகளை கட்டிக்கொண்டு இருப்பார்களாயின், இந்த நாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது.. எனவே மக்களக்கு அழைப்பு விடுக்கின்றோம். நீங்கள் முதலில் மாறுங்கள், நீங்கள் மாறுகின்ற போது உண்மையில் இந்த நாட்டை மாற்றியமைக்க முடியுமென்று நாங்கள் திடமாக நம்புகின்றோம். அந்த நம்பிக்கையின் நட்சத்திரமாக தேசிய மக்கள் சக்தி உங்கள் முன்னால் வந்திருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி பிரதி நித்துவப்படுத்துகின்றன புத்திஜீவிகள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், மீனவர் அமைப்புக்கள், உள்ளிட்ட பல்வேறு சக்திகள் என்று அனைத்து சக்திகளும இனறு தேசிய மக்கள் சக்தியுடன் அணி திரண்டுள்ளனர்.

இங்கு இலட்சக்கணக்கிலான மக்கள் அணி திரண்டிருப்பதை பார்க்கும் போது எமது கண்களுக்கு நன்றாக தெரிகிறது. வேறேதுமில்லை. எதிர்காலம் மேலும் சுபமானது. இந்த 71 வருடங்களாக இந்நாட்டை நாசமாக்கிய கும்பல்களிடம் இருந்து இந்த நாட்டை மீட்க வேண்டிய தேவை எங்களிடம் இருக்கின்றது . இந்த கடமை இந்த மக்களுக்கு இருக்கின்றது.

அதனால் இலங்கையில் வாழுகின்ற மக்களுக்கு தங்களது பிள்ளைகளின் எதிர்காலம், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை இவ்வாறான கனவுகளை கண்கின்றார்கள் ஆனால் வருகின்ற ஆட்சியார்களோ அந்தக் கனவினை சிதைக்கும் காட்டுத்தனமான அரசியலை முன்னெடுக்கின்றனர். அதனால் இலங்கை வாழ் மக்களுக்கு கனவு காணுங்கள் நிச்சயமாக அதனை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். விசேடமாக மக்கள் எம் மீது நம்பிக்கை வையுங்கள் நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கி்றோம். நன்றி வணக்கம்.(பி)

No comments