தமிழர் உணர்வுகள் மௌனிக்கவில்லை:விக்கினேஸ்வரன்?


இன்றைய சூழலில் தமிழர்களுக்கென்று ஒரு தனியான தொடர்புடைய பிரதேசம் இருக்கக்கூடாது என்பதில் அரசு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதுபோன்ற கெடுபிடிகள் தான் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வேறு எந்த வழிமுறைகளுங் காணப்படாத நிலையில் 'சாம பேத தான தண்டம்'என்ற நான்கிலும் இறுதி வழிமுறைக்கு இளைஞர்களைத் தூண்டியது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக எண்ணி அரசு மார்தட்டிக் கொள்ளலாம்.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களின் உணர்வுகள் மௌனிக்கப்படவில்லை என்ற விடயத்தை அரசும் பெரும்பான்மை ஆதிக்கவியலாளர்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மூன்றாவது ஒரு சக்தி அரசுக்கு நெருக்கடிகளைக்கொடுக்கின்றபோது அதனை வெல்வதற்கு தமிழ் மக்களின் ஆதரவைத் தேடி அரசு முழந்தாளிட்டு நிற்கின்ற ஒரு நிலை விரைவில் ஏற்படலாம். அப்பொழுதும் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவினை வழங்கத் தயாராக இருப்பார்களோ நான் அறியேன். எனவேதான் மக்கள் சக்தியாகிய அந்த மாபெரும் சக்தியை நாங்கள் எல்லோரும் சேர்ந்து மேலோங்கச் செய்ய வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்களின் ஒற்றுமை பலப்படுத்தபட வேண்டும் என அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments