ரணிலுக்கு மீண்டும் கை கொடுத்தார் சுமந்திரன்?


மாகாணசபை தேர்தலை நடத்துவதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை பிற்போட மைத்திரி முற்பட்டுள்ள நிலையில் ரணிலிறகாக களமிறங்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.
மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனிநபர் சட்டவரைபொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
பழையமுறையில் தேர்தலுக்குச் செல்லவேண்டும் என பிரதான கட்சிகள் கூறிவருகின்றபோதும், அதற்குத் தேவையான சட்ட மாற்றத்தைக் கொண்டுவர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளது. இவ்வாறான நிலையிலேயே பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனிநபர் சட்டவரைபொன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதேநேரம், பழைய முறையில் தேர்தலை நடத்தமுடியுமா என ஜனாதிபதி மைத்திரிபாலச சிறிசேன, உயர்  நீதிமன்றத்தில் பொருட்கோடல் மனுவொன்றை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் நாளைமறுதினம் உச்சநீதிமன்றம் ஆராயவுள்ள நிலையிலேயே சுமந்திரன் இத் தனிநபர் சட்டவரைபை பாராளுமன்றத்தில் கையளித்துள்ளார்.

No comments