துண்டுதானும் கிட்டவில்லை:வட்டக்கச்சியில் பரிதாபம்?


நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி கிருஷ்ணர் கோவிலடி பகுதியில் இலங்கை காவல்துறையினர் மற்றும் இராணுவம் ,விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை முதல் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீPதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே கனரக வாகனங்கள் சகிதம் நீதிமன்ற அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் விடுதலைப்புலிகளது ஆயுதங்களை தேடி கனரக வாகனங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை என தெரிவித்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

ஒரு மக்கள் பிரதிநிதியாக அந்த மக்களின் உணர்வுகளை ஜனநாயக முறையில் பிரதிபலிப்பவர்களுக்கு சிங்கள மேலாதிக்க அதிகார வர்க்கத்தின் வழமையான அடக்குமுறையின் வடிவம் மீண்டும் பதிவாகின்றதென தனது வீட்டிற்கு அருகில் இன்று காலை படையினர் குவிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல்கள் தொடர்பில் சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தளபதியாக பொறுப்பேற்றுள்ள சவேந்திரசில்வா ஒரு போர்க்குற்றவாளியென சிறீதரன் நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

No comments