கோத்தாவை கொல்ல முயற்சியாம்:புதிய கதைகள் தயார்?


தன்னை சினைப்பர் மூலம் கொல்ல முயற்சிப்பதாக கோத்தபாய தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவே நேற்று முன்தினமிரவு பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் கைதாகியிருக்கின்றமை உறுதியாகியுள்ளது.தேர்தலை கருதி தெற்கு சிங்கள அனுதாப வாக்குகளை அள்ள இராணுவ புலனாய்வு பிரிவு முன்னெடுத்துள்ள நாடகத்தின் ஒரு அங்கமாகவே சிவரூபன் கைதாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அவர் கொழும்பிற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில்  இன்று வைத்தியசாலை பணிகள் தடைப்பட்டு போயிருந்தன.

இதனிடையே சிவரூபனின் விடுலையை வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடமை நிமித்தம் முல்லைதீவு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் ஆனையிறவில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாத தடுப்புபிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.

அப்போதும் பளை வைத்தியசாலையில் தனக்காக காத்திருந்த மூன்று நோயாளர்களிற்கு மருத்துவம் வழங்கிய பின்னரே அவர் சென்றுள்ளார்.

எனினும் சிவரூபனின் விடுதலையே அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவுள்ளனரென்பதை தீர்மானிக்குமென கரைச்சி பிரதேசசபை தலைவர் வேழமாலிதன் தெரிவித்துள்ளார். 

No comments