சிறீதரனை இலக்கு வைத்து தேடுதல் அச்சுறுத்தல்?


கிளிநொச்சி வட்டக்கச்சியில் இன்று காலை படையினர் நடத்திய தேடுதல் தன்னை அச்சகூட்டவென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.ஒரு மக்கள் பிரதிநிதியாக அந்த மக்களின் உணர்வுகளை ஜனநாயக முறையில் பிரதிபலிப்பவர்களுக்கு சிங்கள மேலாதிக்க அதிகார வர்க்கத்தின் வழமையான அடக்குமுறையின் வடிவம் மீண்டும் பதிவாகின்றதென தனது வீட்டிற்கு அருகில் இன்று காலை படையினர் குவிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கிளிநொச்சி வட்டக்கச்சி கிருஸ்ணர் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலீஸ் மற்றும் படையினரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக அரச தரப்பு விளக்கமளித்துள்ளது.

இது வழமையாக வன்னியில் அவ்வப்போது ஆங்காங்கு தங்கங்களையும், ஆயுதங்களையும் தேடி நடக்கின்ற தேடுதல்கள் போன்றதே. குறித்த காணிக்கருகில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் காணியும் உண்டு எனவும் அத்தரப்புக்கள் விளக்கமளித்துள்ளன.

எனினும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சவேந்திரசில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக சிறீதரனின் கருத்துக்கள் வெளியிடப்பட்டதன் பின்னராக நடத்தப்பட்ட தேடுதலில் எந்தவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.

அதனால் இத்தேடுதல் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 

No comments