கோட்டா தேர்தலில் போட்டியிட முடியாது?


ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 2005 இல் தேர்தல் மற்றும் குடிவரவு சட்டத்திட்டங்களை மீறினார் என்பது அம்பலமாகியுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே இரட்டைப் பிரஜா உரிமை தொடர்பில் தேர்தல் வேட்புமனுவின்போது எழுப்பும் சர்ச்சைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் குழப்பமான முடிவே கானப்படுகின்றது.

நவம்பர் மாதம் 8ம் திகதிக்கும் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட ஓர் நாளில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என அதற்கான ஆயத்தங்கள் இடம்பெறும் நிலையில் தேர்தல் அறிவிப்பின்போது ஒரு கட்சி இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவரின் பெயரில் வேட்புமனுத் தாக்கல் செய்தால் அதற்கான முடிவினை தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான விடயம் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு இரட்டைப் பிரஜா உரிமை உடையவர் என ஒரு தரப்பால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டால் அதற்கான சான்று ஆவணம் கோருவதா அல்லது அதற்கான தீர்வினை நீதிமன்றில் சென்று பெறுமாறு அறிவுறுத்துவதா என்பது தொடர்பான இரட்டை கருத்து நிலவியுள்ளது. அவ்வாறு நீதிமன்றை நாடினால் அக் காலத்தில் தேர்தலிற்கான முன்னெடுப்பு மேற்பொள்வதா இல்லையா என்பது தொடர்பிலும் கடும் விவாதங்கள் இடம்பெறுகின்றன.

அதாவது தற்போது ஓர் கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளராக பிரேரிக்கப்படுபவர் இரட்டைப் பிரஜா உரிமையுடன் உள்ளதாக ஒரு கருத்தும் அவ்வாறு உள்ள இரட்டைப் பிரஜா உரிமை இரத்துச் செய்யப்பட்டதான கருத்துமாக வெளிவரும் நிலமை தொடர்பிலேயே ஆணைக்குழுவும் தனது கவனத்தை செலுத்துகின்றது. இதேநேரம் இரட்டைப் பிரஜா உரிமை உள்ளதாக கூறப்படும் நிலையில் இலங்கை கடவுச் சீட்டும் உள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு இரட்டைப் பிரஜா உரிமை பெறுவதற்கு முன்பே 2005ஆம் ஆண்டு காலத்தில் சகோதரனின் வீட்டு முகவரியில் வாக்காளராக பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தற்போது முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments