தரித்திரத்தில் முல்லைதீவை வென்றது கிளிநொச்சி?


அண்மைய தரவுகளின் படி கிளிநொச்சி மாவட்டம் வறுமை நிலையில் முல்லைதீவு மாவட்டத்தை பின்தள்ளியள்ளது.தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிபரத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

தற்போதைய புள்ளிவிபரப்படியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமை நிலை 12.7 வீதமாக காணப்படுகிறது. யாழ். மாவட்டத்தில் 7.7 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலை 11.3 வீதமாக இருக்கிறது.

மறுபுறம் அதே கிளிநொச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் மதுபான விற்பனை நிலையம் நடத்துகின்றார்.அதற்கு போட்டியாக தானும் ஒரு மதுபானச்சாலை திறக்க தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மும்முரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

No comments