ஷஹ்ரானுடன் பயிற்சி பெற்றவர்களை தேடும் வேட்டை - இன்றும் மூவர் கைது

தடை செய்யப்பட்ட ஜமாத்தே மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த மேலும் மூன்று உறுப்பினர்கள் இன்று (07) அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் தலைவன் சஹ்ரான் ஹஷிமுடன் நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து இதுவரை ஜமாத்தே மிலாத்து இப்ரஹிம் அமைப்பின் கிழக்கு மாகாண ஆயுதப் பிரிவு தலைவர் உட்பட அநுராதபுரம் மாவட்ட தலைவர் அடங்கலாக ஆயுதப் பயிற்சி பெற்ற 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

No comments