தோட்டத்து விதையை உண்ட சிறுவர்கள் வைத்தியசாலையில்

மடுல்சீமை, கொக்காகல தோட்டத்தில் ஒரு வகை விதையை உட்கொண்ட 7 சிறுவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் மெட்டிகாதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மடுல்சீமை கொக்காலை தோட்டத்தின் 23ஆம் இலக்க தொடர் குடியிருப்பில் வசிக்கும் 10 வயது சிறுவர்கள் இருவர், 4 வயதுடைய சிறுவர்கள் இருவர், 5, 3 வயதுடைய சிறுவர்கள் மூவரே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

No comments