மட்டக்களப்பில் உள்ள அரசியல் வாதிகள் அதிகாரிகளின் கவனத்திற்கு!!! - நிலவன் நிலா

மட்டக்களப்பில் உடனடியாக செய்யப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் இரண்டு ஒன்று சிறந்த நீர் முகாமைத்துவம் மற்றது சிறந்த குப்பை முகாமைத்துவம் இது இரண்டுக்குமான நீண்ட கால திட்டத்துடன் கூடிய சிறந்த செயற்றிட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாறி மாறி வந்த அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் இதற்கான நிரந்தர தீர்வு ஒன்றை இதுவரை உருவாக்கவில்லை.
பல தடவைகள் பல நாடுகளுக்கு சென்று நீர் முகாமைத்துவம், கழிவகற்றல் முகாமைத்துவம் பற்றி படித்து பயிற்சி பெற்று வந்தவர்கள் இதுவரை செய்தது என்ன?
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகளை வேப்பவெட்டுவானில் புதைப்பது ஒரு தீர்வு அல்ல அது ஒரு தற்காலிக நடவடிக்கை மாத்திரமே இன்று மட்டும் கழிவுகளை புதைப்பதற்கே நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதற்கு பின்னர் உருவாகும் கழிவுகளை என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
வைத்தியசாலை மட்டுமல்ல ஒட்டு மொத்த மாவட்டத்திலும் உள்ள கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்கள் உண்டு.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாகவும் அவசரமாகவும் செய்யப்படவேண்டிய திட்டம் நீர் முகமைத்துவத்திற்கான பொறிமுறை மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவத்திற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாகும்.
அதற்காக மட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

No comments