ஐதேமுவின் முக்கிய கலந்துரையாடல் தோல்வி

File Pic
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவுற்றது.

இதன்போது அரசியல் கூட்டணியின் யாப்பை திருத்துவது உட்பட்ட பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டன.

அதேசமயம் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடும் விடயத்தை தீர்மானிப்பதற்கும், கூட்டணி அறிவிப்பு தினத்தன்று வேட்பாளரை அறிவிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம் எடுத்து அறிவிக்க இன்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தமது சம்மதத்தை வழங்கியுள்ளனர்.

No comments