கோத்தா - சஜித்தை எதிர்க்க ஜேவிபி வேட்பாளர் தயார்

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (18) அறிவிக்கப்படவுள்ளது.

1999ம் ஆண்டுக்கு பின்னர் 20 ஆண்டு கழித்து ஜேவிபியினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலுக்காக நியமிக்கப்படவுள்ளார்.

1999ம் ஆண்டில் நந்தன குணதிலக ஜேவிபியின் சார்பில் போட்டியிட்டிருந்தார். அவருக்கு (344,173) வாக்குகள் கிடைத்திருந்தது. அதன்பின்னர் ஜேவிபி எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. 2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவை ஆதரித்தனர். 2010ம் ஆண்டில் சரத் பொன்சேகாவை ஆதரித்தனர். இறுதியாக 2015ம் ஆண்டு எவரையும் ஆதரிக்காமல் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக செயற்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே அவர்கள் இம்முறை ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கியுள்ளனர். இதன்படி நாளை காலி முகத்திடலில் இடம்பெறும் மாபெரும் பேரணியின் போது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளனர்.

அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிமல் ரத்நாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments