மன்னிப்பு மட்டும் கேட்கமாட்டேன்; ஆவேசப்பட்ட வைகோ.

அவதூறு வழக்கு தொடர்பாக இன்று சென்னை எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த வைகோவிடம்
 தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என செய்தியாளர் ஒருவர் கேள்விஎழுப்பியதினால் கோபமடைந்த வைகோ,

“தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று கூறினேனா? மேல்முறையீடு செய்ததில் எனக்கு ஆயுள் தண்டனையே கொடுத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். மன்னிப்பு மட்டும் கேட்கமாட்டேன். விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என்று சொல்லியுள்ளேன். அத்தனை ஊடகங்களும் என்னை பாராட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் என்னிடம் மேல்முறையீடு ஏன் செய்தீர்கள் என்று கேட்கிறீர்கள். நீதிபதியின் மனதில் விஷமில்லை. உங்களுடைய மனதில் விஷம் நிறைந்திருக்கிறது” என ஆவேசமாக பதிலளித்தது ஊடகவியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருன்தது.

No comments