தமிழீழம் மலர்ந்தது:சுமந்திரன் அன்கோ?


மகாபாரதத்தில் ஜந்து நாடு கேட்டு கடைசி ஊர் கேட்டு சண்டை பிடித்த காலம் போய் கூட்டமைப்ப கணக்காளர் ஒருவரை நியமித்துவிட்டதாய் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ரணில் அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் களமிறங்கி அவரை காப்பாற்றிய கூட்டமைப்பு மீது அனைத்து தரப்பும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

இதனையடுத்து கூட்டமைப்பினர் கல்முனை தமிழ் (வடக்கு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமாக ஆதரவளித்ததாக பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டனர்.

இதனை தொடர்ந்தும் கல்முனை தமிழ் (வடக்கு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டதால் இன்று திரட்டப்பட்ட ஆவணங்களை ஒருவாறாக சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து இப்போது சுமந்திரனின் விசுவாசிகள் தமிழீழம் கிடைத்துவிட்டதென்ற பாணியில் தமது பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டுள்ளனர். 

சாதாரண கணக்காளர் நியமனத்திற்காக ரணில் அரசை காப்பாற்றும் கதிக்கும் தமிழ் மக்களை கொண்டுசென்றுள்ளதே கூட்டமைப்பின் சாதனையென தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

No comments