தாக்குதலுக்கு நிதி சேகரிப்பு! டில்லியில் கைதாகிய14பேரும் தமிழகம் கொண்டுவரப்பட்டனர்!

இலங்கையில் உதித்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில்  தமிழம் மற்றும் கேரளவுடன் இந்திய முழுவதும்  தேசிய புலனாய்வு முகவர்களினால் தொடர்ச்சியாக கண்காணிப்புக்கள் சோதனைகள் நடைபெற்றுவந்த நிலையில்.

நேற்று முன்தினம் தமிழகத்தில் நான்கு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 9 தொலைபேசிகள் , 15 தொலைபேசி அட்டைகள், 7 மெமரி கார்டுகள், 3 மடிகணணிகள், 5 ஹார்ட் டிஸ்க், 6 பென் டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதன் அடிப்படையில் ஹாரிஸ் முஹம்மது, அசன் அலி ஆகியோரிடம் நாகை  வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இருவரையும் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்று இந்தியாவில் தாக்குதல் தொடுக்க சதித் திட்டம் தீட்டியதாக என்.ஐ.ஏ. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. எழும்பூரிலுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர் பாண்டியன் இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்னிலைப்படுத்தபட்டனர். அவர்களை வரும் 25ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் கிடைத்த தகவல் படி தேசிய புலனாய்வு அமைப்பினர் டெல்லியில் 14 பேரை கைது செய்து இரகசியமாக சென்னை கொண்டுவரப்பட்ட அனைவரும்  இன்றே பூந்தமல்லி தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்  என தகவல் வெளியாகியுள்ளது. 

No comments