ஆளில்லா கடையில் தேனீர் ஆற்றும் கூட்டமைப்பு:மனோ?


இன்றைய நிலையில் ததேகூ தலைவர், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளின் கூட்டமொன்றுக்கான அழைப்பு விடுக்க வேண்டும் என்பது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் யோசனையாகும். புதிய அரசியலமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு முன்னெடுப்புக்கும் ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயார்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக சாத்தியப்படாத புதிய அரசியல் யாப்பு, இந்த அரசாங்கத்துக்கு எஞ்சி இருக்கும் காலத்திலும் கொண்டுவரப்படுவது சாத்தியம் இல்லை என்பது கூட்டமைப்புக்கு நன்கு தெரியும். ஆனாலும் அர்த்தமற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாடாளுமன்றில் இரண்டு நாட்களாக நடத்துகிறது.

கூட்டமைப்பின் ஆட்களும், மேலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு ஆட்களைத் தவிர வேறு யாரும் இல்லாது இந்த விவாதம் நேற்று இடம்பெற்றதையும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தீர்மானங்கள், நகர்வுகள் அனைத்துமே தமிழ் மக்களுக்கான தீர்வை தோக்கியதாக இல்லை என்று தெரிகிறது.

கொள்கை அரசியலிலும், அபிவிருத்தி அரசியலிலும் அவர்களின் தீர்மானங்கள் தோற்றுக் கொண்டே இருக்கின்றன. அடுத்த தேர்தலில் அறிவார்ந்த மக்கள் சரியான பதிலை சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments