பேஸ்புக் நிறைவேற்று அதிகாரிகளுக்கு அழைப்பு?


வெறுக்கத்தக்கதும் தவறானதுமான கருத்துகளை சமூக வலைத்தளங்களினூடாக வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து கண்டறிவதற்காகவும் அவற்றைக் கண்காணிப்பதற்காகவும், உரிய தரப்பினரை அழைத்து விசாரணை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் சட்ட விவகாரங்கள் மற்றும் ஊடக ஒழுங்குமுறை தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவே, இந்த விசாரணைகளை நடத்தத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பேஸ்புக், மெசென்ஜர், இன்ஸ்ட்ரகிராம், வைபர், வட்ஸ்அப், கூகுள், இமோ ஆகிய சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய சர்வதேச நிறைவேற்று அதிகாரிகளும் ஏனைய தேசிய நிபுணர்களுமே, இந்த குழுவுக்கு முன்னால் அழைக்கப்படவுள்ளனர்.

No comments