கோத்தாவை விடுவித்ததா அமெரிக்கா?


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியமைக்கான இறுதி ஆவணங்களை தனது இரு கண்களினாலும் கண்டேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் இல்லையென அரச பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பெயர் வெளிவரவில்லையென்பது புதுமையான ஒன்று அல்ல. இருந்தால்தான் அது புதுமையாகும். கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டதற்கான இறுதி அறிக்கை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திடமிருந்து அவருக்கு கடந்த 2019 மே மாதத்திலேயே கிடைக்கப் பெறுகின்றது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை கடந்த 2019 மார்ச் மாதம் 31 ஆம் திகதியே வெளியிட்டது. இது இவ்வாறு இருக்கும் போது அவரது பெயர் எவ்வாறு பட்டியலில் வெளிவரும் எனவும் கேள்வி எழுப்பினார்.

No comments