கோத்தாவும் விசாரணைக்கு அழைப்பு?


உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுக்கு, கடந்த ஆட்சியில் ஊதியம் வழங்கப்பட்டமை தொடர்பில் அப்போது பதவியில் இருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்புலம் தொடர்பான உண்மை தன்மையை அறிந்துக்கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவுக்குழு அழைத்தால் அதற்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments