ஆமிக்கு காணி வாங்கிக்கொடுத்த சுமந்திரன்?


தான் வாதாடுகின்ற வழக்குகளில் எல்லாம் தனது கட்சிக்காரரை கவிழ வைத்து எதிராளிக்கு வெற்றி பெற்றுக்கொடுப்பது எம்.ஏ.சுமந்திரனின் வழமையாகும் .அவ்வகையில் தற்போது கண்டி வீதியால் எழுதுமட்டுவாள் பகுதியில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இலங்கை ராணுவத்தின் 52 பிரிவின் தலைமையகத்திற்கு 71 வயதான முதிய தாயாரின்; 54 ஏக்கர் காணியை அபகரித்து கொடுத்திருக்கிறார் எம்.ஏ.சுமந்திரன்.

இந்த இடம் 2012 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் அபகரிக்கபட்டதாகும்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனது காணியை மீட்பதற்காக வயோதிப தாயார் மேல்முறையீடு நீதிமன்றத்தில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடக வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார் கொழும்பில் உள்ள . மேல்முறையீட்டு நீதிமன்றம் சமீபத்திய வழங்கிய தீர்ப்பில் 'இவை தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், அவை விவாதிக்கப்படக்கூடாது, வெளிப்படையாக விசாரிக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளது.அத்தோடு அந்த தாயாரின் காணிகளை ராணுவத்திடம் இருந்து பெற்று கொடுக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. நீதிபதி மஹிந்த சமயவர்தன 'தேங்காய்களைப் பிடுங்குவதும் தென்னைகளை நடுவதையும் விட தேசிய பாதுகாப்பு முக்கியமானது என விளக்கமளித்துள்ளார்.

இந்த வழக்கில் சுமந்திரன் காணி பொறுப்பேற்பு சட்டம் பிரிவு 2 இன் கீழ் சுமந்திரன் வாதாடினார் . நீதிபதி அவரின் வாதத்தை முழுமையாக நிராகரித்து விட்டார்.

மத்திய அரசுக்கு காணி அதிகாரரங்கள் முழுமையாக இருப்பதும் தேசிய பாதுகாப்பு என்கிற ஒற்றை சொல்லில் சொற்ப மாகாண அதிகாரரங்களும் காணி விடயத்தில் மத்திய அரசுக்கு பாரப்படுத்த படுவதும் எவளவு ஆபத்தானது என்பதை இந்த வழக்கு சுமந்திரனுக்கு கற்பித்து இருக்கும் . அரைகுறை தீர்வு திட்டங்கள் எவ்வளவு ஆபத்து என்பதை புரிய வைத்து இருக்கும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் தனியார் சொத்துக்களில் தேசிய பாதுகாப்பு என்ற போலிக்காரணத்தின் கீழ் இராணுவ தளங்களை அமைப்பதற்கான பொது நோக்கத்தை அரசியல் ரீதியாக விவாதிக்க சுமந்திரனும் அவரது கட்சியும் மறுதலித்து வருவதே காணிகள் பறிபோக காரணமாகி வருகின்றது. 

No comments