கூட்டமைப்பு கை தூக்குகின்றது?


அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற உள்ளநிலையில் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கலாமென தெரியவந்துள்ளது. 

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதுடன், விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஆனால் இன்னொரு புறம் கொடுரமான வெயில் கிழிந்த கொட்டகைகள் புளுதி நிலமெனன  சொந்த ஊரிலிலேயே அகதிகளாக கேப்பாபுலவு மக்களது போராட்டம் தொடர்கின்றது.863வது நாளாக போராட்டம் நடத்தும் கேப்பாப்பிலவு மக்களும் .முற்றத்தை இழந்து விளையாடும் குழந்தைகள் என அவர்களது அவலங்கள் தொடர்கின்றது.

கண் முன்னால் இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் மக்கள் பிரதிநிதிகளோ அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க இரவு பகலாக பாடுபட்டுவருகின்றது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, ஐக்கிய தேசிய கட்சி அனைத்து வழிகளிலும் செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மீண்டும் கார் பெமிட்களை கூட்டமைப்பினர் பெற்றுக்கொள்வரென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments