ஷங்கரில்லா– தாஜ் சமுத்ரா :ஓய்ந்த பாடில்லை?


கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான சட்டத்தரணியொருவர், அரசாங்கத்திடமிருந்து 50 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை கேட்டு, அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயித்து தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய அறிந்திருந்த போதிலும் அது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தனக்கு இந்தளவுக்கு இழப்புகள் ஏற்பட்டடுள்ளன என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை 12ஆம் திகதி அழைப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டதரணியான மோதின டிக்கி பண்டார ஏக்கநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்,
பிரதிவாதிகளாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெரிணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுத் துறையின் பிரதானி திலன்ன ஜயவர்தன, விசேட பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தஸநாயக்க உள்ளிட்ட 44 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தில், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அங்கு காலையுணவு உண்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழு கோரியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தா குமாரசிறி இதனை தெரிவித்தார்.
ஏப்ரல் 21ஆம் திகதி பல இடங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகள், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை ஏன் கைவிட்டனர் என்ற கேள்விக்கான விசாரணைகளை முன்னெடுக்க இந்தப் பட்டியல் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments