160வது ஆண்டைக் கொண்டாடுகிறது 'பிக் பென்'

பிரித்தானியாவின் மிகப்பிரபலமான 'பிக் பென்' மணிக்கூடு இன்று தனது 160வது ஆண்டைப் பிறந்தநாளைப்  பூர்த்தி செய்கிறது.

பிரித்தானியாவின் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வடக்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள மணிக்கூடே இந்த 'பிக் பென்'. இதற்கு இன்னொரு புனைபெயர் உண்டு. அது 'கிரேட் பெல்'.

இக்கோபுரத்தில் புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதால் 160வது ஆண்டு நாளில் பெரிய மணி ஒலிக்காது ஆமைதியாகப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது 'பிக் பென்' மணிக்கூடு.


No comments