முன்னிலையானார் ஷாபி! போராட்டமும் முன்னெடுப்பு!

போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபியை குருநாகல் நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிக்சை செய்தமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளதால், ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதேநேரம் ஷாபிக்கு எதிர்ப்பு  தெரிவித்து, அபே ஜனபலய அமைப்பினால் இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலை முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


அபே ஜனபலய அமைப்பின் குருநாகல் மாவட்ட தலைவர் டேன் பிரியசாத்தின் வழிநடத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments