முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை: மனைவி பூங்கொடி பேட்டி

எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனை சந்தித்த பின் அவரது மனைவி பூங்கொடி நிருபவர்களிடம் கூறியதாவது:-

கரூரை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகாரில் எனது கணவர் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது. எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை. தான் துன்புறுத்தப்பட்டதாக கூறினார். மேலும் கடத்தப்பட்டதாகவும், அடைத்துவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தன்னை எங்கே அடைத்து வைத்திருந்தனர் என்பது எனக்கு தெரியவில்லை  என்று தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் அளவுக்கு எனது கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது.

No comments