மைத்திரிக்கு வந்த திடீர் சந்தேகம்?


அரசியலமைப்பின் 19ஆவது துரதத்தின் பிரகாரம் 5 வருடங்களாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதியா அல்லது மே மாதம் 15ஆம் திகதியாக முடிவடையும் என்பது தொடர்பில் ஜனாதிபதி, உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரவுள்ளார்.
தனது பதவிக்காலம் எப்போது சரியாக ஆரம்பிக்கிறது என்பது பற்றி எதிர்வரும் 11ஆம் திகதி உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ளார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு சபாநாயகர் கையொயப்பட்மிட்டு அதனை நடைமுறைக்குகொண்டு வந்த தினமான 2015மே 15ஆம் திகதி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தனது பதவிக்காலம் 2020 இல் முடிவடைவதாக கருதும் ஜனாதிபதி அதனை விளக்கி கூறுமாறே உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானம் கேட்கவுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் இவ்வருடம் முடிவடைவதாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் ஜனாதிபதி மீண்டும் இவ்வாறு விளக்கம் கோரவுள்ளார்.

No comments