கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள தொடரூந்து பாதையில் கொழும்பில் இருந்து வந்த தொடரூந்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கடந்த 25ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் உயிரிழந்திருந்ததோடு, அதனைத்தொடர்ந்து பாதுகாப்பு கடவையை சீர் செய்து தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments