மானிப்பாய் சூடு:இதுவரை ஜவர் கைது?


யாழ். மானிப்பாயில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் இளைஞனுடன் தொடர்புகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை(24) காலை மேலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடாத்துவதற்கு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம்(22) வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் பதுங்கிருந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதான சந்தேகநபர்களிடம் மானிப்பாய்ப் பொலிஸார் நடாத்திய தீவிர விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments