நாவற்குழியில் களவு:பின்னணியில் விகாராதிபதி!


தமிழரசுக்கட்சியால் தாரை வார்க்கப்பட்ட நாவற்குழி பகுதியில் இந்து ஆலயங்களை இலக்கு வைத்து கொள்ளைகள் அரங்கேற தொடங்கியுள்ளது. நாவற்குழி பௌத்த விகாரைக்கு அருகிலுள்ள பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நாவற்குழி திருவாசக அரண்மனையின் ஒரு பகுதியை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த பெறுமதியான ஐம்பொன் விநாயகர் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் சம்பவம் இன்று புதன்கிழமை(24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்; தெரிவித்தார். குறித்த ஐம்பொன் சிலை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, நாவற்குழி திருவாசக அரண்மனை நிறுவப்பட்டதன் ஓராண்டுப் பூர்த்தி அண்மையில் சிறப்பாக நடந்தேறிய நிலையில் அதற்கு போட்டியாக பெருமெடுப்பில் அருகிலுள்ள பௌத்த விகாரையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments