வவுனியாவிலிருந்து நீர்கொழும்புக்கு செல்லும் வெளிநாட்டு அகதிகள்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் அங்கிருந்து நீர்கொழும்புக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டியவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து நீர்கொழும்பிலுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 113 வெளிநாட்டு அகதிகள், பாதுகாப்பு கருதி பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அவர்களில் 20 பேர் சுய விருப்பத்துடன், அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் 15 பேர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து நீர்கொழும்பிற்கு செல்ல விரும்பம் தெரிவித்துள்ளதாக பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் வெளிநாட்டு அகதிகள் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments