துப்பாக்கிகளை காணோம்?
பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து T- 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல்போனமை குறித்த விசாரணை.
பொலிஸ் நிலையத்திலிருந்து T-56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல்போனமை குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகள் காணாமல்போனமை குறித்து பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் கடமைநேர பொறுப்பதிகாரியினால், துப்பாக்கிகள் தொடர்பாக முன்னெடுத்த பரிசோதனைகளின்போது, T- 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல்போயுள்ளமை தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments