ஈழத்தமிழர்களுக்காக இந்திய பாராளுமன்றத்தில் கலங்கி அழுத அதிமுக எம்.பி!

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என அதிமுக மாநிலங்கள் அவை  எம்.பி மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

அவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை இட்டு இறுதியாக உரையாற்றியபொழுது தனது பதவிக்கலங்களில் நடைபெற்ற முக்கிய முக்கிய நிகழ்வுகள் குறித்து நினைவுகூர்ந்து வந்தார் அப்போது இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மாநிலங்களவை கண்டுகொள்ளவும் இல்லை, இரங்கல் தெரிவிக்கவும் இல்லை அது என் இதயத்தை கிழித்த சம்பவங்களில் ஒன்று குறிப்பிட்டார் . மற்றும் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியும் கண்கலங்கிநார். மைத்ரேயன் மூன்று முறை மாநிலங்கள் அவைக்கு ஜெயலலிதாவினால் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments