முன்னணி வழக்கு?

யாழ் மாநகரசபையால் நடைமுறைப்படுத்தப்படும் ஸ்மார்ட்போல் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்தக் கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாவாந்துறையை சேர்ந்த பொதுமகனான செல்லப்பர் பத்மநாதன் என்பவர் சார்பில், சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழக்கை தாக்கல் செய்தார்.
சட்டவலுவற்றதான இந்த திட்ட ஒப்பந்தம் மீது இடைக்கால தடை விதிக்கவும், தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதை உடனடியாக நிறுத்தவும், திட்டத்தை நிறுத்தவும் உத்தரவிட மனுவில் கோரப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக யாழ் மாநகரசபை, முதல்வர், ஆணையாளர், ஈடொட்கோ நிறுவனம் ஆகியன பெயரிடப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

No comments