நான் சொன்னதைத்தான் ஜெகன்மோகன் செய்கிறார்; சீமான் ஆதங்கம்.

நான் எதையெல்லாம் சொல்லி வருகிறேனோ அதைத்தான் ஆந்திராவின் முதல்வர்  சகோதரர் ஜெகன்மோகன் செய்து வருகிறார் என நாம்தமிழர் கட்சி சீமான் ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார். நான் அறிவிக்கும் திட்டங்களை தமிழகத்தில் கேலி செய்கிறார்கள் ஆனால் மற்ற மாநிலத்தார் அதை நடைமுறைப்படுத்துகிறார்கள் என மனவருத்தத்தோடு பேசியிருக்கிறார்.
வேலூர் தேர்தலில் போட்டியிடும் நாம்தமிழர் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் செய்துவருகிறார் 
அப்போது
நான் என்ன சொன்னேனோ அதைதான் சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றி வருகிறார். ஆந்திராவில் சட்டம் கொண்டு வந்தது போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்க வேண்டும்" என்றார்.
மற்றும் லஞ்சம், ஊழலில் திளைக்கும் கட்சிகளுடன் அவர்கள் கூட்டணி வைத்தால், இது மாற்றா? மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல். அதனால்தான் நாங்கள் மக்களை நம்பி தொடர்ச்சியாக களம் இறங்கி வருகிறோம். என்னை பற்றி செய்திகள் வரக்கூடாது என்று தடுத்தார்கள். ஆனால் மக்கள் எங்களை நம்பினார்கள். நம்பிக்கை ஆற்றலாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறது என்றார்.


No comments