டிரம்ப் இட்ட கட்டளை; தர்மசங்கடத்தில் ஆப்பிள் நிறுவனம்!

மேக் புரோ கணினிகளை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி மையத்தில் அமைக்கலாம், ஆனால் அப்படி அமைத்தால் அதை விற்க அமெரிக்காவிற்கு வரும்போது அவர்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

ஜூலை 18ம் தேதி ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க வர்த்த நிறுவனத்திடம் தங்களின் மேக் புரோ மேசை கணினியில் வரும் 15 உட்கருவிகளுக்கு 25% வரி சலுகை கோரியிருந்தது. அது குறித்தான மக்கள் கருத்து ஆகஸ்ட் ம் தேதி அன்று முடிவடைந்த நிலையில் டிரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்
பின் டிரம்ப் பத்திரிக்கையாளர்களடம் பேசும்போது ஆப்பிள் நிறுவனம் டெக்சாஸ் மாநிலத்தில் உற்பத்தியை மையத்தினை நிறுவும் என்றும் அவ்வாறு அவர்கள் நிறுவினால் நான் மிகவும் மகிழ்வேன் என்றும் தெரிவி்த்திருந்தார்
இதையடுத்து வாட்ஸ் ஸ்ட்ரிட் ஜர்னல் ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் புரோ கணினியினை டெக்சாஸ் மாநிலத்திலயே உற்பத்தி செய்வார்கள் என்று தெரிவித்திருந்தது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ள  அறிக்கையில் மேக் புக் புரோ வடிவமைப்பும், தயாரிப்பும் அமெரிக்காவில் செய்யப்பட்டது என்றும், பல உள்பொருட்கள் அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட்டது என்றும் இறுதி  கட்டமைப்பு மட்டுமே உற்பத்தி செய்யும் பணி என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

No comments