கால் வைத்த வைகோவுக்கு கரங்கொடுத்த சுப்பிரமணியசுவாமி!

மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்வாகிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்ற  வளாகத்தில்  இன்று மீண்டும் கால் வைத்தார். அப்போது அங்கு வந்திருந்த பாஐக சுப்பிரமணியசுவாமி வைகோவுக்கு கரங்கொடுத்து வரவேற்றார்.
 தேசதுரோக வழக்கு இருப்பதால், வைகோவை எம்பியாக பதவியேற்க வாய்ப்பு அளிக்க கூடாது என்று  சுப்பிரமணியசுவாமி மனு அளித்துள்ள நிலையில்., இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா, காமராசர் , பசும்பொன் முத்துராமலிங்கம் ஆகியோரின் சிலைகளுக்கு வணக்கமும் வைகோ செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments