குறுக்கால் ஓடி கையெழுத்து வாங்கிய சுமந்திரன்!


கன்னியா வெந்நீர் ஊற்று காணி தொடர்பில் தமிழரசு கட்சியின் சட்டக்குழு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் முன்னர் அதனை கையாண்ட 'நீலகண்டன் சட்ட நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணமென சொல்லப்படுகின்றது.

காணி உரிமையாளரான பெண்மணியிடம் சாதுரியமாக பேசி சுமந்திரன் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான ஆவணங்களில் ஒப்பம் பெற்றதாக சொல்லப்படுகின்றது. 

கன்னியா வெந்நீரூற்றுக்களின் மீது நடாத்தப்படும் பேரினவாத கையகப்படுத்தல்கள் தொடர்பாக ஆரம்பம் தொட்டே சட்ட நடவடிக்கைகளை நீலகண்டன் நிறுவனம் முன்னெடுத்திருந்தது. 

சட்டத்துறையின் மிக முன்னொடிகளில் ஒருவரான கனக.ஈஸ்வரன் அவர்களின் வழிநடத்தலில் கன்னியா விடயத்தில் சட்ட நடவடிக்கைகளை நீலகண்டன் நிறுவனம் முன்னெடுத்திருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் கள ஆய்விற்காகவும் மேலதிகச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் திருகோணமலைக்கு வருகை தந்திருந்த பிரணவன் நீலகண்டன் கன்னியா வெந்நீரூ}ற்றுக்களிற்கு வருகை தந்து காணி உரிமையாளரான பெண்மணியுடன் கலந்துரையாடல்களை நடாத்திவிட்டு பின்னர் தென்கைலை ஆதீனத்தில் ஆதீன முதல்வரையும் ஏனைய கன்னியா மரபுரிமைசார் தொழிற்பாடுகளை முன்னெடுத்தவர்களையும் சந்தித்துப் பேசிச் சென்றிருந்தார்.

எனினும் கடந்த வாரம் சுமந்திரன் குறித்த காணி உரிமையாளரான பெண்மணியினை தமிழரசு ஆதரவாளர் திருமலை நவம் சகிதம் சந்தித்து பேசியுள்ளார். 

இந்நிலையில் குறுக்கிட்ட சுமந்திரன் தரப்பு காணி உரிமையாளரான பெண்மணியிடம் வழக்கு தாக்கல் செய்யும் ஆவணங்களில் ஒப்பத்தை பெற்றுள்ளது.

இதனையடுத்து கன்னியா வென்நீறூற்று தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பிலிருந்து நீலகண்டன் உடன் நீலகண்டன் நிறுவனம் விலகியுள்ளது.

இன்று எம்.ஏ சுமந்திரன்,கேசவன் சயந்தன் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை,உதயன் பத்திரிகை டக்ளஸ் பிரச்சினையென பலவற்றில் கடைசி நேரத்தில் கவிழ்த்து இதே அணி சாதனை புரிந்திருந்தது.

No comments